பாபநாசம் அருகே  இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் இருபிரிவினரிடையே மோதல்

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே ஞாயிற்றுகிழமை உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை அடக்கம் செயவது குறித்து இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே ஞாயிற்றுகிழமை உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை அடக்கம் செயவது குறித்து இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

பாபநாசம் காவல் சரகம், பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்நதவர் ஷாகுல்ஹமீது அந்த பகுதியிலுள்ள  டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் பண்டாரவாடை கிளை துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.இவரது மனைவி நர்கீஸ் பானு(35) தம்பதியருக்கு 10 வயதில் ஒரு பெண் பிள்ளையும் 4 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இந் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நர்கீஸ் பானு கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.

உயிரிóழந்த நர்கீஸ்பானுவின் உடலை பண்டாரவாடை பெரிய பள்ளிவாசலில் உள்ள அடக்க ஸ்தலத்தில் தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் மார்க்க வழி முறையில்  அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.பண்டாரவடை பெரிய பள்ளிவாசல் சுண்ணத் ஜமாத் மார்க்க வழி முறையில் செயல்பட்டு வருவதால் இறந்தவரின் உடலை தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் மார்க்க வழி முறையில் அடக்கம் செய்ய பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் ஜமாத் சபை நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்,

இதனால் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன்,கும்பகோணம் சார் ஆட்சியர் கோவிந்தராவ்,பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் ப.செல்வராஜ்,பாபநாசம் வட்டாட்சியர் வாசுதேவன்,உள்ளிட்டோர் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்

பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் சில தினங்களில் இரு பிரிவினரையும் கூட்டி அமைதி பேச்சு நடத்தி முடிவு காண்பது என்றும், தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத்திற்கு அடக்க ஸ்தலத்திற்கான இடத்தை அரசு தேர்வு செய்து தர நடவடிக்கை மேற்கொள்வது எனவும் முடிவு செயயப்பட்டது.

இதனை  தொடர்ந்து உயிரிழந்த நர்கீஸ் பானுவின் உடல் பண்டாரவாடையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிவாசலின் கொல்லைப்புறம் திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com